🪔 விநாயகர் சதுர்த்தி 2025 – சிறப்பு, வரலாறு மற்றும் ராசி பலன்கள்

🪔 விநாயகர் சதுர்த்தி – சிறப்பு, வரலாறு மற்றும் ராசி பலன்கள்


🐘 விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன?

விநாயகர் சதுர்த்தி என்பது பிள்ளையார் பெருமான் பிறந்த தினம் என்று நம்பப்படுகிறது. இந்த நாள் "சுக்ல பக்ஷம்" (சந்திரன் வளர்கின்ற பகுதி) சதுர்த்தி திதியில், அவனி மாதத்தில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு வரும் 27 தேதி ஆகஸ்ட் மாதம் வருகிறது. தமிழ் தேதி ஆவணி 11 ஆகும். 🪔 சுபமுகூர்த்த தினம். அரசு விடுமுறை.

நல்ல நேரம் ⌚ : 

காலை: 9.15 - 10.15
மாலை: 1.45 - 2.45

திதி: சதுர்த்தி 24.31 (P.M.3.52) ஹஸ்தம் 2.38 (A.M.7.7) தியா 24.331 மரண 2.38 மேல் சித்தயோகம். சதுர்த்தி விரதம். ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். 

🙏 ஏன் கொண்டாடுகிறோம்?

விநாயகர் அறிவு, வளம், தடைகளை நீக்கும் கடவுள் என்று கருதப்படுகிறார். எந்த காரியத்தையும் தொடங்குவதற்கு முன் முதலில் பிள்ளையாரை வணங்கும் பழக்கம் தமிழகத்தில் மிகவும் பிரபலமானது என்று நாம் அறிவோம்.

🍽️ சிறப்பு நைவேத்யம் என்றால் என்ன?

உப்புக் கோழுக்கட்டை, இனிப்புக் கோழுக்கட்டை, அவியல், சுண்டல், எள்ளுருண்டை ஆகும்.

இவை எல்லாம் பிள்ளையாருக்குப் பிடித்த நைவேத்யங்கள் ஆகும். இதில் ஒற்றை செய்து கோவில் அல்லது வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது ஆகும்.

விநாயகர் சதுர்த்தி அன்று நமது ராசி பலன்கள் என்ன ?

🏡 வீட்டில் விநாயகர் சதுர்த்தி எப்படி கொண்டாடுகின்றனர் நாம் தமிழ் மக்கள்?

1. 🪔 வீட்டை சுத்தம் செய்தல்
2. 🌿 மண் அல்லது களிமண் கொண்டு விநாயகர் சிலையை செய்து வீட்டில் வைத்து வழிபாடு செய்வது.
3. 🌸 புஷ்பம், அகிலம், சந்தனம் வைத்து விநாயகர்யை அலங்கரித்தல்.
4. 🍌🍎 பழங்கள், கோழுக்கட்டை, அப்பம், பூர்ணம் போன்ற நைவேத்யம் செய்து கோவில் சென்று அதனை அன்னதானம் வழங்கப்படுகிறது.
5. 🙏 குடும்பத்துடன் விநாயகர் அஷ்டோத்திரம் அல்லது சதுர்த்தி ஸ்லோகங்கள் சொல்லுதல்.
6. விநாயகர் கோவில் சென்று அங்கு வழிபாடு செய்வது மிகவும் முக்கியம் ஆகும்.

🎉 திருவிழா சூழல்களில் 

தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இன்றும் நமது நகரங்களில் பெரிய பெரிய விநாயகர் சிலைகள் வைத்து இசை, நடனம், ஊர்வலம் போன்றவை நடைபெற்று வருகிறது என்று நாம் அறிவோம்.

இன்றைய மருத்துவக் குறிப்பு : கற்றாழை சோற்றையும் மஞ்சள் தூளையும் அரைத்து விளக்கெண்ணெய் விட்டு சூடுபடுத்தி நகத்தின் மீது பூசி வர நகசுத்தி குணமாகும்.

🪔 முடிவு

விநாயகர் சதுர்த்தி என்பது நம்ம குடும்பத்தையும் சமூகத்தையும் இணைக்கும் ஆன்மிக விழா ஆகும். 

பிள்ளையாரின் அருள் பெற்றால் வாழ்க்கையில் எல்லா தடைகளும் நீங்கி வெற்றி பெறலாம்.

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏🏻.

Post a Comment

0 Comments